Thursday, 15 March 2012

பாலியல் வினாக்கள் 1
ஓம்


காமம் - காதல் இதை வைத்துத்தான் இன்று வெறும் வாயெல்லாம் அவலுக்கு பதில் மென்று கொண்டிருக்கிறது,
காமம்
அது 
ஒரு சுவை!
அது ஒரு
அவசிய
தேவை
அடைந்தவன்
மனிதனாவன்
அடையாதவன்
மிருகமாவான்
நெருப்பை விடவும்
சுடக்கூடியது
காமம்.
கண்ணாடியைவிடவு
மென்மையாக
கையாள
வேண்டியது
பணத்தைவிடவும் அதிகமாக
பாது காக்க
வேண்டியது
காமம்!
ஆணுக்கு ஒரு நீதி 
பெண்ணுக்கு ஒரு நீதி
ஆண் தேடிப்போனால்
காதல்!
பெண்தேடிப்போனால்
காமம்! 

 நாகரிகம் அடைந்த நாடுகளில் கூட பெண்ணுக்கு அநீதிதான்,காரணம் பெண் பிள்ளை பெறும் இயந்திரம் மட்டுமே என்பது அவர்களின் நினைவுகள் 
போலும்.இறைவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு நீதியைதான் படைத்தான்,பெண்ணுக்கு சிறப்பாக தாய்மை அடையும் பேற்றினை அளித்தான்.ம் இது நவீன யுகம் இன்று பெண்கள் காமத்தின் பெயரால் விற்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்,ஏன் அவர்களேவிரும்பி தன்னை விற்றுகொண்டிருக்கிறார்கள் இதில் நியாயம் எங்கே என்று என்னிடம் ஒருவர் கேட்டார்.
அது அவரவ்ர் விருப்பம் தனது தலை விதியை தானே எழுதிக்கொள்ளுமாறு அவரவர் கைகளுக்கு எழுதுகோலை இறைவன் என்றோ கொடுத்துவிட்டான்.,ஆண் யாரை வேண்டுமானல் பார்க்கலாம் யாரிடம் வேண்டும் என்றாலும் போகலாம்.அதுவே ஒரு பெண் சென்றால் அவளுக்கு சமூகம் கேவலமான் பெயரிட்டு அழைக்கும்,அது கூடாது,
உங்கள் கஜானாவில் பணம் சேர்ப்பதற்காக பெண்களை கடத்தி விற்பது கூடாது,ம் ஆடு மாடு வெட்டுவது போலதான்,இதற்கு பாவம் புண்ணியம் என்பதெல்லாம் இல்லை என்று நினைத்தால் அது நிச்சயம் தவறு.கயிற்றின் பிடியில் மாடு கட்டுண்டு கிடப்பது போல பாவத்தின் பிடியில் கட்டுண்டால் விமோசன்மே இல்லை. சுகத்திற்காக தான் அழிந்து போகலாம் ஆனால் மற்றவர்களை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.எந்த பெண்ணையும் கெடுத்து குட்டிசுவராக்கும் முயற்சியில் யாரும் இறங்க வேண்டாம்.பெண்கள் களவாடப்பட்டு ஆன்லைனில் விற்பதாக ஒரு சினிமா படம் பார்த்தேன்.யார் வீட்டு சொத்தை திருடி யாரிடம் விற்பார்கள்.
பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமல்ல,
கூன்
குருடு
செவிடு
குழந்தையின்மை
வறுமை
திடீர்மரணம்
ஆட்டிஸம்
மனநோய்
கைவிட முடியாத சில
 பழக்கங்களுக்கு அடிமையாகி வருந்துதல் என ஏராளமான் கொடுமைகள்.
ஒருவர் சீரழிக்கப்பட்டால் அவரோடு மட்டுமா போகிறது,அவர் குடும்பமும் சேர்ந்தல்லவா துயரத்தை அனுபவிக்கிறது!
உங்களால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால் 
நீங்கள் என்ன என்ன பாவத்தை அனுபவிக்க வேண்டும் தெரியுமா?
1.மீண்டும் பிறவி எடுக்க வேண்டும்
2.அதுவரை அவள் படிப்பிற்காக பட்ட பாடு
3.அவரது பெற்றோர் பட்ட பாடு,
4.கணவன் பட்ட பாடு
5.அவளின் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாடு என்று பட்டியல் நீளூம்,ஆசை யாருக்குத்தான் இல்லை அதற்காக இறைவனின் படைப்பை கேவலப் படுத்த வேண்டுமா? என்ன?
காமம் தவறல்ல அதை கேலிக்கூத்து ஆக்குவது,வஞ்சிப்பது தவறு!

இரகசியம்
பரமரகசியம்
அதைவிடவும் ரகசியம்
காமம்
அகப்பட்டவன்
அயோக்கியன்
அகப்படாதவன்
யோக்கியன் 

கதை அளக்க இந்த ப்ளாக் இல்லை 
இனி பாலியல் பற்றி எனக்கு தெரிந்த சில விளக்கங்களையும் சில ஆரோக்ய குறிப்புகளையும் பகிந்து கொள்ள உங்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவி!தவறுகளும் இருக்கலாம்,நண்பர்களே!மன்னிக்கவும்.
பாலியல் வினாக்கள் 1
காம களம் எப்படி இருக்க வேண்டும்?
ஆலயம் போல சுத்தமாக இருக்க வேண்டும்,இனிய தெய்வீக இசை ததும்ப வேண்டும்.அறையில் கண்டிப்பாக தீபம் ஏற்றியிருக்க வேண்டும்,அந்த அறையில் சுகந்த மணம் வீச வேண்டும்.ஏதாவவது தெய்வத்தின் சித்திரம்,இனிய பாஸ்டிவ் காட்சிகள் கண்ணெதிரே தோற்றமளிக்க வேண்டும்.
காரணம் இந்த நேரத்தின் நினைவுகள்,காட்சிகள்,மணம் நமது உயிர் மூலம் வரை சென்று பாய்வதால் அவற்றின் விளைவுகள் நம்மகு ஆரோக்யத்தையும் அதிர்ஷ்டத்தையும்,நமது வாரிசுகளின் தலைவிதியைகூட நிர்ணயிப்பதாக அமைந்துவிடும் என்பதால்!